ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
|திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
திருப்பூர்,
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய திருப்பூர் மாவட்ட மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.