< Back
மாநில செய்திகள்
பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடியில் மேம்பாட்டு பணிகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடியில் மேம்பாட்டு பணிகள்

தினத்தந்தி
|
21 Aug 2023 12:45 AM IST

பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடியில் மேம்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் ஆலோசனை செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா தலத்தில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து நேற்று முன்தினம் இரவு சுற்றுலா அலுவலகத்தில் கலெக்டர் மகாபாரதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார், தாசில்தார் செந்தில்குமார், காவிரிபூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்