< Back
மாநில செய்திகள்
43 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...! சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
மாநில செய்திகள்

43 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...! சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

தினத்தந்தி
|
20 Jan 2023 11:14 AM IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் கானப்பட்டாலும், அவ்வபோது ஒரே அடியாக விலை அதிகரித்து உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சில நாட்களில் விலை குறைந்தாலும், பல நாட்களில் விலை அதிகரித்த வண்னம் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,325க்கு விற்கப்படுகிறது.

அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்