< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
27 போலீசார் இடமாற்றம்
|10 Jan 2023 12:15 AM IST
விழுப்புரம் மாவட்டத்தில் 27 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன் வானூர் போலீஸ் நிலையத்திற்கும், சக்திவேல் விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும், வளவனூர் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வன் கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், செஞ்சி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் பெரும்பாக்கம் மதுவிலக்கு சோதனைச்சாவடிக்கும், இவர்கள் உள்பட மொத்தம் 27 போலீசார் மாவட்டத்திற்குள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.