< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

டிஜிபி அலுவலகம்

மாநில செய்திகள்

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்

தினத்தந்தி
|
4 Aug 2023 9:32 PM IST

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மதுரை, திருச்சிக்கு புதிய போலீஸ் கமிஷனர்களும், சென்னையில் புதிய கூடுதல் கமிஷனர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3 டி.ஜி.பி.க்களும், 3 கூடுதல் டி.ஜி.பி.க்களும், 13 ஐ.ஜி.க் களும், 8 டி.ஐ.ஜி.க்களுமாக மொத்தம் 27 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக மாற்றப்பட்டனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

1. பி.கே.ரவி - ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக பணியில் உள்ள இவர் மின்சார வாரிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார்.

2. வன்னியபெருமாள் - மின்சார வாரிய தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக உள்ள இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ராஜீவ் குமார் - மத்திய அரசு பணியில் இருந்த இவர் தமிழக பணிக்கு மாற்றப்பட்டு போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. பால நாகதேவி - சென்னை நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள இவர் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவியேற்பார்.

5. அபின் தினேஷ் மோடக் - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றிய இவர் மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பேற்பார்.

6. வினித் தேவ் வான்கடே - மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டி.ஜி.பி.யான இவர் மாநில நிர்வாகப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. பிரமோத் குமார் - மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐ.ஜி.யாக உள்ள இவர் கரூர் காகித ஆலை தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்பார்.

8. காமினி - சிவில் சப்ளை சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் திருச்சி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சத்யபிரியா - திருச்சி போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக பதவியேற்பார்.

10. ஆசியம்மாள் - பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யான இவர் சென்னை தலைமையக ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார்.

11. லோகநாதன் - சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றும் இவர் மதுரை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார்.

12. நரேந்திரன் நாயர் - மதுரை போலீஸ் கமிஷனராக உள்ள இவர் தென் மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

13. அஸ்ரா கார்க் - தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக பதவியேற்பார்.

14. சந்தோஷ் குமார் - சென்னை நவீன மயமாக்கல் ஐ.ஜி.யாக உள்ள இவர் மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.

15. பவானீஸ்வரி - சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

16. சுதாகர் - மேற்கு மண்டல ஐ.ஜி.யாக உள்ள இவர் சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. கபில்குமார் சி.சரத்கர் - சென்னை போக்குவரத்து போலீஸ்கூடுதல் கமிஷனராக உள்ள இவர் தலைமையக கூடுதல் கமிஷனராக பதவியேற்பார்.

18. ஜோஷி நிர்மல்குமார் - காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர் தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.

19. ஜெயகவுரி - தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் ஆயுதப்படை ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.

20. கயல்விழி - கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி.யாக உள்ள இவர் சென்னை தலைமையக இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

21. சாமுண்டீஸ்வரி - சென்னை தலைமையக இணை கமிஷனராக பணியில் உள்ள இவர் வடசென்னை இணை கமிஷனராக பொறுப்பேற்பார்.

22. ரம்யா பாரதி - வடசென்னை இணை கமிஷனராக பணியாற்றும் இவர் மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

23. பொன்னி - மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருக்கும் இவர் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்பார்.

24. பகலவன் - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக இருக்கும் இவர் திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. சரவண சுந்தர் - திருச்சி சரக டி.ஐ.ஜி.யான இவர் கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்பார்.

26. அபிஷேக் தீக் ஷித் - சென்னை தலைமையக டி.ஐ.ஜி.யான இவர் வடசென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.

27. ராஜேந்திரன் - நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றும் இவர் உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்