தேனி
வரைவு வாக்காளர் பட்டியல் 27-ந்தேதி வெளியீடு
|தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் மறுவரையறை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த பட்டியலை கலெக்டர் ஷஜீவனா வெளியிடுகிறார். இந்த பட்டியல் உத்தமபாளையம், பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்கள், 6 நகராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்கான சிறப்பு முகாம்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 4, 5-ந்தேதிகளிலும், 18, 19-ந்தேதிகளிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடக்கிறது. வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து வருகிற டிசம்பர் 9-ந்தேதிக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலரான ஆர்.டி.ஓ.விடம் தெரிவிக்கலாம். அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.