< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
21 March 2024 5:06 PM IST

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள். இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ம்தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19-ம்தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது.

தொடர்ந்து வருகிற 26-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 26-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்