< Back
மாநில செய்திகள்
வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-ஆவது பிறந்தநாள் - அதிமுக சார்பில் மரியாதை
மாநில செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-ஆவது பிறந்தநாள் - அதிமுக சார்பில் மரியாதை

தினத்தந்தி
|
31 Dec 2023 10:08 AM GMT

வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-ஆவது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 264-ஆவது பிறந்த நாளான (3.1.2024) புதன்கிழமை காலை 10 மணியளவில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு. மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்