< Back
மாநில செய்திகள்
சின்னசேலத்துக்கு 2,600 டன் பச்சரிசி வந்தது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலத்துக்கு 2,600 டன் பச்சரிசி வந்தது

தினத்தந்தி
|
10 Jan 2023 12:15 AM IST

சரக்கு ரெயில் மூலம் சின்னசேலத்துக்கு 2,600 டன் பச்சரிசி வந்தது.

சின்னசேலம்,

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2 ஆயிரத்து 600 டன் பச்சரிசி மூட்டைகள் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகளை லாரிகள் மூலம் சின்னசேலம் கூகையூர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த பணியை சேமிப்பு கிடங்கு மேலாளர் பிரபு, துணை மேலாளர் ஆனந்தசரவணன், ஒப்பந்ததாரர் தியாகராஜன், இந்திய உணவு கழக மேலாளர்கள் மோகனகணபதி, ராமலிங்கம் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர். இந்த பச்சரிசி, பொது வினியோக திட்டத்தின் கீழ குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்