செங்கல்பட்டு
ஊரப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் கொள்ளை
|ஊரப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே பெரிய அருங்கால் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 48). இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து தொழில் செய்துவருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இவர் தனது வீட்டை பூட்டி கொண்டு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம், வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து சம்பத் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுவாஞ்சேரி போலீசார் வந்து பெரிய அருங்கால் கிராமத்தில் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.