செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள்; ஆண்களை விட பெண்கள் அதிகம்
|செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 லட்சத்து 62 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் குறித்து வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டார். அதனை தேர்தல் தாசில்தார் சங்கர் பெற்றுக் கொண்டார்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க.வை சேர்ந்த காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம். ஆறுமுகம், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில், பா.ஜ.க. மாவட்ட தலைவர் மோகன்ராஜ், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
26 லட்சத்து 62 ஆயிரத்து 242 வாக்காளர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்த ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 18 ஆயிரத்து 882 பேரும், பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 42 ஆயிரத்து 926 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 434 பேர் என மாவட்டத்தில் 26 லட்சத்து 62 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர்.
சோழிங்கநல்லூர்
ஆண்கள்- 3,34,219
பெண்கள்-3,32,132
மூன்றாம் பாலினத்தவர் - 113
மொத்தம் - 6,66,464.
பல்லாவரம்
ஆண்கள்-2, 10,647
பெண்கள்-2,12,575
மூன்றாம் பாலினத்தவர் - 41
மொத்தம் - 4,23,263
தாம்பரம்
ஆண்கள் -1,99,497
பெண்கள்-2,01,827
மூன்றாம் பாலினத்தவர் - 58
மொத்தம் - 4,01,382
செங்கல்பட்டு
ஆண்கள்-2,04,829
பெண்கள்-2,12,184
மூன்றாம் பாலினத்தவர் - 55
மொத்தம் - 4,17,068
திருப்போரூர்
ஆண்கள்-1,45,925
பெண்கள்-1,52,057
மூன்றாம் பாலினத்தவர் - 51
மொத்தம் - 2,98,033
செய்யூர் (தனி)
ஆண்கள்-1,11,923
பெண்கள்-1,16,038
மூன்றாம் பாலினத்தவர் - 29
மொத்தம் - 2,27,990
மதுராந்தகம்
ஆண்கள்-1,11,842
பெண்கள்-1,16,113
மூன்றாம் பாலினத்தவர் - 87
மொத்தம் - 2,28,042.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருத்தங்கள் செய்வதற்கு இந்த மாதம் 12,13,26,27 தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.