< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
6 Jan 2023 2:43 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 லட்சத்து 61 ஆயிரத்து 516 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டார். அதனை தேர்தல் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ், தேர்தல் தாசில்தார் சங்கர் பெற்று கொண்டனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

அப்போது கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்த ஆண் வாக்காளர்கள் - 13 லட்சத்து 19 ஆயிரத்து 183 பேர், பெண் வாக்காளர்கள் - 13 லட்சத்து 41 ஆயிரத்து 888 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 445 பேர் என செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 லட்சத்து 61 ஆயிரத்து 516 வாக்காளர்கள் உள்ளனர்.

சோழிங்கநல்லூர் தொகுதி

சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆண்கள்- 3 லட்சத்து 34 ஆயிரத்து 81.

பெண்கள்-3 லட்சத்து 32 ஆயிரத்து 96. மூன்றாம் பாலினத்தவர் -118.

மொத்தம் - 6 லட்சத்து 66 ஆயிரத்து 295 பேர்.

பல்லாவரம் தொகுதியில் ஆண்கள்- 2 லட்சத்து 11 ஆயிரத்து 522. பெணகள்-2 லட்சத்து 13 ஆயிரத்து 650. மூன்றாம் பாலினத்தவர் - 41

மொத்தம் - 4 லட்சத்து 25 ஆயிரத்து 213 பேர்.

தாம்பரம் தொகுதியில் ஆண்கள் -2 லட்சத்து 573. பெண்கள்- 2 லட்சத்து 2 ஆயிரத்து 918. மூன்றாம் பாலினத்தவர் - 58. மொத்தம் - 4 லட்சத்து 3 ஆயிரத்து 549 பேர்.

செங்கல்பட்டு தொகுதியில் ஆண்கள்-2 லட்சத்து 5 ஆயிரத்து 465. பெண்கள்-2 லட்சத்து 12 ஆயிரத்து 729. மூன்றாம் பாலினத்தவர் - 60. மொத்தம் - 4 லட்சத்து 18 ஆயிரத்து 254 பேர்.

திருப்போரூர் தொகுதியில் ஆண்கள்-1 லட்சத்து 45 ஆயிரத்து 266

பெணகள்-1 லட்சத்து 5 ஆயிரத்து 353. மூன்றாம் பாலினத்தவர் -53

மொத்தம் - 2 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர்.

செய்யூர் (தனி) தொகுதியில் ஆண்கள்-1 லட்சத்து 10 ஆயிரத்து 934

பெண்கள்-1 லட்சத்து 14 ஆயிரத்து 538. மூன்றாம் பாலினத்தவர் - 27

மொத்தம் - 2 லட்சத்து 25 ஆயிரத்து 499.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் ஆண்கள்-1 லட்சத்து 11 ஆயிரத்து 342.

பெண்கள்-1 லட்சத்து 15 ஆயிரத்து 604. மூன்றாம் பாலினத்தவர் - 88

மொத்தம் - 2 லட்சத்து 27 ஆயிரத்து 34 பேர் உள்ளனர்.

மேலும் செய்திகள்