தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்திற்கு 25-ந் தேதி உள்ளூர் விடுமுறை
|தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜசோழனின் 1038-வது ஆண்டு சதயவிழாவையொட்டி 25-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர்;
தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜசோழனின் 1038-வது ஆண்டு சதயவிழாவையொட்டி 25-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாமன்னன் ராஜராஜசோழனின் சதயவிழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசும்போது, தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-வது ஆண்டு சதய விழா வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு 25-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகளை தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், சதய விழாக் குழு தலைவர் து.செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தவவளவன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், மாநகராட்சி, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, உணவு பாதுகாப்புதுறை, பள்ளி கல்வித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.