< Back
தமிழக செய்திகள்
2,500 டன் புழுங்கல் அரிசி
தஞ்சாவூர்
தமிழக செய்திகள்

2,500 டன் புழுங்கல் அரிசி

தினத்தந்தி
|
4 May 2023 1:34 AM IST

2,500 டன் புழுங்கல் அரிசி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் மற்றும் புனல்குளம், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,500 டன் புழுங்கல் அரிசி, 240 லாரிகளில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டன. பின்னர் சரக்கு ரெயிலில் தலா 21 வேகன்களில் 1,250 டன் அரிசி மூட்டைகள் வீதம் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மற்றும் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்