< Back
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 25 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்ற 25 பேர் கைது

தினத்தந்தி
|
8 Oct 2023 12:15 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் போலீசார், மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மரக்காணம் குமரவேல்(வயது 54), கண்டாச்சிபுரம் மேல்வாலையை சேர்ந்த மணிகண்டன்(36), திருவெண்ணெய்நல்லூர் சந்திரசேகர்(56), விழுப்புரம் அருகே ஏ.பாக்கம் பிரபாகரன்(36), ஏழுமலை(63), விக்கிரவாண்டி ரெட்டிக்குப்பம் ஞானவேல்(46), திருநந்திபுரம் முருகன்(46), திண்டிவனம் வெளியனூர் பெருமாள்(61), கண்டாச்சிபுரம் கண்ணன்(70), விழுப்புரம் வி.மருதூர் பாஸ்கர்(60), ஜி.ஆர்.பி. தெரு தங்கத்துரை(44), திண்டிவனம் முருங்கப்பாக்கம் கலியமூர்த்தி(63) உள்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அவர்களிடமிருந்து 2 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் முருகன் என்பவரின் பெட்டிக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்