< Back
மாநில செய்திகள்
25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

தினத்தந்தி
|
15 Aug 2023 12:31 AM IST

25 கிலோ இறைச்சி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது நேற்று அதிகாலை 3 மணியளவில் செட்டிகுளம்-ஆலத்தூர் கேட் சாலையில் நாட்டார்மங்கலத்தில் மோட்டார் சைக்கிளில் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் சுமார் 25 கிலோ இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எந்த விலங்கின் இறைச்சி என்பது தெரியாததால், போலீசார் அந்த இறைச்சியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வன விலங்கை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனைக்கு கொண்டு செல்ல மோட்டார் சைக்கிளில் வைத்திருந்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்