< Back
மாநில செய்திகள்
இந்து முன்னணியினர் 25 பேர் கைது
சேலம்
மாநில செய்திகள்

இந்து முன்னணியினர் 25 பேர் கைது

தினத்தந்தி
|
19 Sept 2023 1:14 AM IST

அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இதுதொடர்பாக இந்து முன்னணியினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாரமங்கலம்:-

தாரமங்கலம் பகுதிகளான துட்டம்பட்டி, பூக்காரவட்டம், மாட்டையாம்பட்டி, கோனேரிவளவு, செங்கான் வளவு, மேட்டுக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து இருந்தனர். அதனை தாரமங்கலத்தில் ஊர்வலமாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதனை அறிந்த போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்றனர். அப்படி இருந்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமையில் விநாயகர் சிலைகளுடன் சங்ககிரி பிரதான சாலையில் ஊர்வலமாக புறப்பட்டனர். தினசரி மார்க்கெட் அருகில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஒரு வேனில் ஏற்றி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் தடையை மீறி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்திய இந்து முன்னணி நிர்வாகிகள் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்