கன்னியாகுமரி
ரூ.25 கோடி கோவில் நிலம் மீட்பு
|நாகர்கோவில் அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
கோவில் நிலம்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான நிலம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட தம்மத்து கோணம் பகுதியில் இருந்தது. அங்கு இருந்த 3.16 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதைத்தொடர்ந்து அறநிலையத்துறை தாசில்தார் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி, பணியாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலையில் துறை நில அளவையர்கள் அஜித், ராகேஷ் ஆகியோர் நிலத்தை அளந்து மீட்டனர். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.
அறிவிப்பு பலகை
பின்னர் அதில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இந்த நிலம் உடனடியாக பொது ஏலம் மூலம் குத்தகைத்கு விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.