< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சூடானில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசு முயற்சியால் மீட்பு
|10 May 2023 12:15 AM IST
சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை,
சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு பத்திரமாக அழைத்து வரப்படுகின்றனர். அங்குள்ள தமிழர்களை பத்திரமாக மீட்பதில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சூடான் நாட்டில் சிக்கித்தவித்த 247 தமிழர்கள் தமிழ்நாடு அரசின் முயற்சியால் மீட்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தமிழர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 5-ம் தேதி வரையிலும் 31 மாவட்டங்களை சேர்ந்த 247 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளார்.