< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
குரூப்-1 தேர்வை 2,425 பேர் எழுதினர்
|19 Nov 2022 10:42 PM IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,425 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,425 பேர் குரூப்-1 தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான போட்டித் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 மையங்களில் நடந்த இத்தேர்வை 2,425 நபர்கள் கலந்துகொண்டு எழுதினர். 1,458 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.
திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் சார்லஸ் பள்ளி மற்றும் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு நடைபெற்றதை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தாசில்தார் சிவப்பிரகாசம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் குமரேசன், தேர்வு மைய அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.