< Back
மாநில செய்திகள்
கடன் தருவதாக கூறி டாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.2.41 லட்சம் அபேஸ்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கடன் தருவதாக கூறி டாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.2.41 லட்சம் அபேஸ்

தினத்தந்தி
|
3 Jun 2022 11:22 PM IST

கடன் தருவதாக கூறி பல் டாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.2.41 லட்சம் அபேஸ் செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:

கடன் தருவதாக கூறி பல் டாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.2.41 லட்சம் அபேஸ் செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறார்கள்.

பல் மருத்துவர்

கிருஷ்ணகிரி பி.டி.வி. காலனியை சேர்ந்தவர் பாபுசூசைராஜ் (வயது 54). பல் டாக்டா். இவரது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் இந்தியா கேபிடல் பைனான்சியல் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் இருந்து குறைந்த வட்டிக்கு லோன் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்த பாபு சூசைராஜ் லோன் வாங்குவதில் விருப்பம் இருப்பதாக பதில் குறுந்தகவல் அனுப்பினார். இதையடுத்து லோன் தொடர்பாக சதீஷ் என்பவர் பாபு சூசைராஜை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது லோன் தொடர்பாக சில ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். அதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறினார்.

இதை நம்பி பாபு சூசைராஜ் அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 450 செலுத்தினார். பணம் செலுத்தய பிறகு அந்த நம்பருக்கு மீண்டும் தொடர்பு கொண்டார். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாபு சூசைராஜ், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மோசடி

ஓசூர் பேகேப்பள்ளி மகாலட்சுமி லேஅவுட்டை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி பவானி (30). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் கோவையில் இருந்து பேசுவதாகவும், உங்களின் கிரெடிட் கார்டுக்கு லோன் கொடுப்பதாக கூறினார். அப்போது பவானி லோன் வாங்குவதாக கூறினார். இதையடுத்து உங்களின் வங்கி கணக்கில் விவரங்களை கொடுக்க வேண்டும் என கூறினார். இதையடுத்து பவானியும் அவர் கூறிய விவரங்களை கொடுத்தார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்து 797 எடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பவானி மீண்டும் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பவானி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்