< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
2,400 மரக்கன்றுகள் நடும்பணி
|12 Jun 2023 1:05 AM IST
2,400 மரக்கன்றுகள் நடும்பணியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், போலீஸ் குடியிருப்புகளிலும், ஆயுதப்படை போலீஸ் வளாகங்களிலும் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதனை தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை போலீஸ் வளாகங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகங்களில் 2,400 மரக்கன்றுகள் நடப்பட்டன. போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.