< Back
மாநில செய்திகள்
நிதி நிறுவன அதிபரிடம் ரூ.2.40 லட்சம் ஆன்லைன் மூலம் நூதன மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.2.40 லட்சம் ஆன்லைன் மூலம் நூதன மோசடி

தினத்தந்தி
|
26 March 2023 12:50 PM GMT

நிதி நிறுவன அதிபரிடம் ரூ.2.40 லட்சம் ஆன்லைன் மூலம் நூதன மோசடி நடைபெற்றுள்ளது.

திருச்சி பனையக்குறிச்சி ஏ.ஆர்.கே.நகரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 49). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அதேபகுதியில் உள்ள தனியார் வங்கியில் வங்கி கணக்கு வைத்து இருந்தார். கடந்த 1-ந் தேதி இவருக்கு மர்மநபரிடம் இருந்து செல்போன் மூலம் `லிங்க்' ஒன்று அனுப்பப்பட்டது. அதில், உங்களுடைய வங்கி கணக்கு விரைவில் மூடப்பட உள்ளது. அவ்வாறு மூடப்படாமல் இருக்க வேண்டுமானால் உங்களுடைய தகவல்களை இந்த `லிங்க்' உள்ளே சென்று பதிவிடுங்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய உதயகுமார் அந்த `லிங்க்'கின் உள்ளே சென்று வங்கி கணக்கு அட்டை எண் உள்பட பல்வேறு தகவல்களை பதிவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் வந்தது. அந்த எண்ணையும் பதிவு செய்தார். அதன்பிறகு உதயகுமார் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 989 எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அது `ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. உடனே இது குறித்து மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-----

மேலும் செய்திகள்