மதுரையில் ஏப்ரல் முதல் 24 மணி நேர விமான சேவை தொடக்கம்
|புதிய விமான சேவைகள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்து உள்ளனர்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.
தென் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர். இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும் என்று விமான நிலைய இயக்குநர் கணேசன் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய விமான சேவைகள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் தெரிவித்து உள்ளனர்.