< Back
மாநில செய்திகள்
ெபாதுமக்களிடம் இருந்து 24 மணி நேரமும் குப்பைகள் பெற ஏற்பாடு
விருதுநகர்
மாநில செய்திகள்

ெபாதுமக்களிடம் இருந்து 24 மணி நேரமும் குப்பைகள் பெற ஏற்பாடு

தினத்தந்தி
|
31 July 2022 12:41 AM IST

அருப்புக்கோட்டையில் பொதுமக்களிடம் இருந்து 24 மணி நேரமும் குப்பைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் கூறினார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் பொதுமக்களிடம் இருந்து 24 மணி நேரமும் குப்பைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நகரசபை தலைவர் கூறினார்.

சாதாரண கூட்டம்

அருப்புக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பழனிச்சாமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், நகர்நல அலுவலர் ராஜ நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

உறுப்பினர் மீனாட்சி:- புளியம்பட்டியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

சேதமான சாலை

முருகானந்தம் :- 26-வது வார்டு பகுதியில் கழிவுநீர் முறையாக செல்ல வழியின்றி காணப்படுகிறது.

நகர சபை தலைவர் :- உறுப்பினர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகர் பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் சாலைகள் சேதமாகி காணப்படுகிறது.

குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிவடைய உள்ளதால் சேதமான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும்.

காந்தி மைதானம் மார்க்கெட், நெசவாளர் காலனியில் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார வளாகம்

வருகிற 15-ந் தேதி முதல் மக்காத குப்பைகளை விலை கொடுத்து வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். மொபைல் கிளினிங் திட்டம் மூலம் 24 மணி நேரமும் பொதுமக்களிடம் குப்பைகளை பெற்று நகரை சுத்தமாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சிட்டி செக்யூரிட்டி பிளான், சிட்டி டெவலப்மெண்ட் பிளான் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

துணைத் தலைவர் பழனிசாமி:- நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதியில் இடம் தேர்வு செய்து கொடுத்தால் அங்கு சுகாதார வளாகம் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்