< Back
மாநில செய்திகள்
மானாமதுரையில் 24-ந்தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம்
சிவகங்கை
மாநில செய்திகள்

மானாமதுரையில் 24-ந்தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம்

தினத்தந்தி
|
22 May 2022 1:22 AM IST

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து மானாமதுரையில் 24-ந்தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதை தொடர்ந்து மானாமதுரையில் 24-ந்தேதி கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு

மானாமதுரை வைகை ஆற்றில் 72 குடிநீர் திட்டங்களுக்கும், விவசாயப் பாசனக் கிணறுகள் பாதிப்பு ஏற்படும் வகையில் அரசு சார்பில் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளடக்கிய போராட்டக் குழுவினர் வருகிற 24-ந்தேதி மானாமதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இது தொடர்பாக மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.

கடையடைப்பு, சாலை மறியல்

இதையடுத்து மறியல் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மானாமதுரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வைகை பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாய சங்கம், அனைத்து அரசியல் கட்சிகள், நகர் வர்த்தக சங்கம், ஓட்டல் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதில் பல்வேறு கிராம மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தவும் வணிகர் சங்கங்களின் ஆதரவைப் பெற்று கடையை அடைப்பதற்கு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களிடத்தில் விழிப்புணர்வு செய்து மணல் குவாரியை நிரந்தரமாக தடை செய்வதற்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்வது என்றும் அதோடு வருகிற 24-ந்தேதி மானாமதுரை பைபாஸ் சாலையில் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவது என்றும், அன்றைய தினம் மானாமதுரையில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்