< Back
மாநில செய்திகள்
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி ஆர்ப்பாட்டம் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

"இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி ஆர்ப்பாட்டம்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தினத்தந்தி
|
16 Sept 2022 8:14 AM IST

இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.

சென்னை,

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் மதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலர் துரை வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மல்லை சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, நாட்டில் இந்தி சாம்ராஜ்யம் போய் இந்து சாம்ராஜ்ஜியம் அதிகரித்து வருகின்றது என குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தி திணிப்பை கண்டித்து வரும் 24- தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். முன்னதாக பேசிய துரை வைகே, மதிமுக பீனிக்ஸ் பறவை போல மீளும் என்றார்.

மேலும் செய்திகள்