திருச்சியில் 24-ந்தேதி நடைபெறும் ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி
|திருச்சியில் 24-ந்தேதி நடைபெறும் ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
திருச்சி,
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து அரசியல் களத்தில் தனியாக இயங்கி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்த நிலையில் வரவிருக் கின்ற பாராளுமன்ற தேர் தலை முன்னிட்டு தனது பலத்தை நிரூபிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த மாநாடு வருகிற 24-ம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான காவல்துறை அனுமதி மற்றும் ரெயில்வே துறை அனுமதியை பெற்றுள்ளனர்.
இதற்கிடையே நாளை (திங்கட்கிழமை) மாலை திருச்சி பிரீஸ் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.