< Back
மாநில செய்திகள்
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி குன்னத்தில் 24-ந்தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி குன்னத்தில் 24-ந்தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
15 Jun 2023 7:19 PM GMT

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி குன்னத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் 24-ந்தேதி நடக்கிறது.

மருத்துவ முகாம்

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட முகாம்களை நடத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் அரசு அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம்

முகாமில் தொற்றா நோய்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக செய்து கொள்ளலாம். மேலும் பொது மருத்துவம், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பொது அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள் மற்றும் மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு டாக்டர்களால் வழங்கப்படவுள்ளது.

இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. முகாமில் கலந்து கொள்ளும் மருத்துவ மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அட்டை இலவசமாக வழங்கப்படும். பொது மக்கள் அனைவரும் இப்பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்