< Back
மாநில செய்திகள்
23-வது கார்கில் வெற்றி தினம் அனுசரிப்பு: உயிர் நீத்த வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி
சென்னை
மாநில செய்திகள்

23-வது கார்கில் வெற்றி தினம் அனுசரிப்பு: உயிர் நீத்த வீரர்களுக்கு போர் நினைவுச்சின்னத்தில் அஞ்சலி

தினத்தந்தி
|
27 July 2022 12:12 PM IST

23-வது கார்கில் வெற்றி தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

லடாக்கின் வடக்கு கார்கில் மாவட்டத்தில் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்த பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்து 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி இந்திய ராணுவம் வெற்றி வாகை சூடியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை நினைவுகூரும் வகையிலும், நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூரும் வகையிலும் கார்கில் வெற்றி தினம் (கார்கில் விஜய் திவாஸ்) ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதியன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், 23-வது கார்கில் வெற்றி தினம் நேற்று அனுரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் தென் பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஏ.அருண், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்பு படை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், தேசிய சாரணியர் படை மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும், நாட்டுக்காக இன்னுயிரை கொடுத்து தியாக செம்மலாக விளங்கிய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்