< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்
|15 Oct 2022 12:21 AM IST
ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் கணினி வழி தேர்வு நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. காலை, மதியம் ஆகிய 2 வேளைகளில் தேர்வு நடந்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் நாள் கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 370 பேரில், 237 பேர் தேர்வு எழுதினர். 133 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.