< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 235 பேர் கைது..!
|30 May 2022 3:58 PM IST
குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் கஞ்சா விற்ற 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் அண்மைக் காலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வந்த நிலையில் போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கலைத் தடுத்து நிறுத்தும் வகையில் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
இதன் பேரில் கஞ்சா கடத்தல், விற்றல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் மடக்கி பிடித்துவந்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி 132 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 235 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 91 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரண் பிரசாத் தெரிவித்தார்..