திருவாரூர்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 230 மனுக்கள் பெறப்பட்டன
|மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 230 மனுக்கள் பெறப்பட்டன
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 230 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பகுதியினை சேர்ந்த முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு கலெக்டரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.5,320 மதிப்பிலான காற்று படுக்கையும், சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சகி திட்டம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி புரிபவர்களுக்கு பணி நியமன ஆணையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையையும் கலெக்டர் வழங்கினார்.