< Back
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயில்களில் ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம் - நிர்வாகம் அறிவிப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில்களில் ஒரே நாளில் 2.30 லட்சம் பேர் பயணம் - நிர்வாகம் அறிவிப்பு

தினத்தந்தி
|
14 Sept 2022 9:09 AM IST

மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊர்களில் இருந்து வரும் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரெயில் நிறுவனம் அளித்து வருகிறது. அந்தவகையில் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 12-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 30 ஆயிரத்து 611 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 21 ஆயிரத்து 419 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் 11 ஆயிரத்து 189 பயணிகளும் மற்றும் கிண்டி மெட்ரோ ரெயில் நிலையத்தில் 10 ஆயிரத்து 599 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்