சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் நாளை 23 மின்சார ரெயில் சேவைகள் ரத்து
|சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் நாளை 23 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்றும் (21-ந்தேதி), நாளையும் (22-ந்தேதி) ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மூர்மார்க்கெட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரெயில், சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, நாளை மூர்மார்க்கெட்டில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 4.20, 5 மணி, 5.20, 7.30, 7.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக சூலூர்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு காலை 5 மணி, 5.40, 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் சேவைகள் ரத்தாகிறது.
23 சேவை
மூர்மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 5.40, 6.25, 6.50, 8.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு காலை 3.50, 4.50, 5.10, 6 மணி, 8 மணிக்கு புறப்படும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, சென்னை கடற்கரையிலிருந்து பொன்னேரிக்கு காலை 5.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில், மறுமார்க்கமாக பொன்னேரியிலிருந்து கடற்கரைக்கு காலை 6.45 மணிக்கு புறப்படும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. எண்ணூரிலிருந்து திருவள்ளூருக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் ரெயில், பொன்னேரியிலிருந்து மூர்மார்கெட்டுக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் ரெயில், ஆவடியிலிருந்து எண்ணூருக்கு காலை 5 மணிக்கு புறப்படும் ரெயில், திருவள்ளூரிலிருந்து பொன்னேரிக்கு காலை 5.20 மணிக்கு புறப்படும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
மொத்தமாக இன்று 3 ரெயில் சேவையும், நாளை 23 ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை மூர்மார்கெட்-கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இன்று இரவு 10.45, 11.20 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். நாளை காலை 4.20, 5 மணி, 5.20, 5.40, 6.25, 6.50, 7.30, 7.45, 8.15 ஆகிய நேரங்களில் மட்டும் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.