< Back
மாநில செய்திகள்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் 22-ந்தேதி மண்டல பூஜை நிறைவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் 22-ந்தேதி மண்டல பூஜை நிறைவு

தினத்தந்தி
|
19 May 2023 12:59 AM IST

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை 22-ந்தேதி நிறைவடைகிறது.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உபகோவிலான பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3-ந்தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி வெகு விமரிசையாக நடந்தது. தற்போது 2 கோவில்களிலும் கும்பாபிஷேக மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. வருகிற 20-ந்தேதியுடன் பெரியசாமி மலைக்கோவிலிலும், 22-ந்தேதியுடன் மதுரகாளியம்மன் கோவிலிலும் 48 நாள் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு பெறுகிறது என்று கோவில் அலுவலர்கள் தெரிவித்தனர். கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு நாளில் மதுரகாளியம்மன் கோவிலில் யாகசாலையில் சிறப்பு ஹோமம் வளர்க்கப்படுகிறது. மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது. அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

மேலும் செய்திகள்