< Back
மாநில செய்திகள்
சிறப்பு முகாம்களில் 22,474 மனுக்கள்
தேனி
மாநில செய்திகள்

சிறப்பு முகாம்களில் 22,474 மனுக்கள்

தினத்தந்தி
|
4 Sept 2022 10:45 PM IST

தேனி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நடந்த சிறப்பு முகாம்களில் 22 ஆயிரத்து 474 மனுக்கள் பெறப்பட்டன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தேனி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் மக்கள் பலரும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க ஆர்வத்துடன் மனு கொடுத்தனர். தேனி, கொடுவிலார்பட்டி பகுதிகளில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பதற்காக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4,854 மனுக்களும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் 6,022 மனுக்களும், போடி சட்டமன்ற தொகுதியில் 6,324 மனுக்களும், கம்பம் சட்டமன்ற தொகுதியில் 5,274 மனுக்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 474 மனுக்கள் பெறப்பட்டன.




மேலும் செய்திகள்