< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் ரூ.224.26 கோடி வருவாய்
|13 July 2024 9:29 PM IST
முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கிடையே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான நேற்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பத்திரப்பதிவு மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒரே நாளில் அதிக வருவாய் கிடைத்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக நேற்று (ஜூலை-12) ஒரே நாளில், பத்திரப்பதிவு மூலம் அரசுக்கு ரூ.224.26 கோடி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் 20,310 ஆவணங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.