< Back
மாநில செய்திகள்
17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 2,225 பேர் போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 2,225 பேர் போட்டி

தினத்தந்தி
|
4 Dec 2022 12:16 AM IST

17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 2,225 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 17 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.50 மணி முதல் காலை 10.50 மணி வரை நடக்கிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த எழுத்து தேர்வினை எழுத மொத்தம் 2,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். எழுத்து தேர்வு பெரம்பலூர் வட்டத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் வட்டத்திற்கு வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்திற்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது. தேர்வு அறைக்கு காலை 9.30 மணியில் இருந்து தேர்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வாளர்கள் தேர்வு கூட நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்), கருப்பு பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை தவிர வேறு எந்தவொரு பொருட்களையும் தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

மேலும் செய்திகள்