சேலம்
சேலத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
|சேலத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்
சேலம் மாநகரில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
இடமாற்றம்
சேலம் மாநகரில் ஒரே போலீஸ் நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நிர்வாக காரணமாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் டவுன் குற்றப்பிரிவுக்கும், அன்னதானப்பட்டி சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரகலா செவ்வாய்பேட்டை சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சின்னதங்கம் அன்னதானப்பட்டி சட்டம், ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்
இதேபோல் அம்மாபேட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கணேசன் அன்னதானப்பட்டி குற்றப்பிரிவுக்கும், அங்கு அதே பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் கிச்சிபாளையம் குற்றப்பிரிவுக்கும், சேலம் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராணி கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவுக்கும், பள்ளப்பட்டி சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராணி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கமிஷனர் உத்தரவு
இவர்கள் உள்பட மொத்தம் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடனடியாக அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு சென்று பொறுப்பேற்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.