< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
22-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
|18 Aug 2022 11:13 PM IST
பழனி அருகே பாப்பம்பட்டி, தாழையூத்து ஆகிய பகுதிகளில் வருகிற 22-ந்தேதி மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி, தாழையூத்து துணை மின்நிலையங்களில் வருகிற 22-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிக்கூட்டம், தாழையூத்து, மொட்டனூத்து, வயலூர், சாமிநாதபுரம், கண்டியகவுண்டன்புதூர், புஷ்பத்தூர், லட்சலப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.