திருச்சி
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்கள் 22 பேர் கைது
|மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
சமயபுரம்:
சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரை கண்டித்தும், ஒருதலைப் பட்சமாக செயல்படும் அதன் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் சமயபுரம் நால்ரோட்டில் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்திற்காக இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமையில் தொழிலாளர்கள் நால்ரோட்டில் திரண்டனர். இந்நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று போலீசார் கூறினர்.இதைத்தொடர்ந்து அவர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாண்டியன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.