< Back
மாநில செய்திகள்
நெல்லை மாவட்டத்திற்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை
மாநில செய்திகள்

நெல்லை மாவட்டத்திற்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
7 Jun 2024 11:56 AM IST

21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

தமிழகத்தில் உள்ள பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஆனித் தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோவிலில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்