தஞ்சாவூர்
219 மதுபாட்டில்கள்- ரூ.19 ஆயிரம் பறிமுதல்
|திருவையாறில் 219 மதுபாட்டில்கள்- ரூ.19 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவையாறு:
திருவையாறு பகுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் நடுக்காவேரி மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (வயது45) என்பவர் போலீசாரை கண்டதும் தான் வைத்திருந்த சாக்கு மூட்டையை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அதில் 28 மதுபாட்டில்கள் இருந்தது. இந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த குடிசை வீட்டில் சோதனை செய்தனர். அங்கு இருந்த ஒரு இரும்பு பெட்டியில் ரூ.19 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் இரண்டு சாக்கு மூட்டைகளில் 191 மதுபாட்டில்கள் இருந்து. இதை தொடர்ந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேல்முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.