< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 216 மனுக்கள் பெறப்பட்டன
|8 Aug 2022 8:24 PM IST
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 216 மனுக்கள் பெறப்பட்டன
வெளிப்பாளையம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 216 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.