< Back
மாநில செய்திகள்
2,125 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

2,125 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

தினத்தந்தி
|
2 Jan 2023 8:00 PM GMT

மாவட்டத்தில் 2,125 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மாவட்டத்தில் 2,125 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

விருதுநகர் மாவட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்து பயிற்சி மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதில் 2,125 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழாகிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமை தாங்கினார்.

பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் வெள்ளைத்துரை, சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) எம்பெருமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அடிப்படை செயல்கள்

பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார்.

பயிற்சியை தொடங்கி வைத்து மாநில பார்வையாளராக வருகை புரிந்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் ஆசீர் ஜூலியஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் கனவுத்திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 ஆண்டு நிறைவில் புரிந்து எழுத, வாசிக்க மற்றும் கணித அடிப்படை செயல்கள் தெரியாத தொடக்க நிலை மாணவர் இல்லை என்ற நிலை உருவாக்குவதற்காக ஆசிரியர்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

162 கருத்தாளர்கள்

மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைப்பதற்கும், புரிதலுடன் கற்பதற்கும், எண்ணும் எழுத்தும் திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. மாணவர்கள் எல்லா கற்றல் விளைவுகளையும் அடைவதற்கு பொருத்தமான கற்பித்தல் பொருட்கள், கற்பித்தல் முறை, யுக்திகள் இப்பயிற்சியில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 162 கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஜஸ்டின் தங்கராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்