தமிழகத்தில் புதிதாக 2,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
|தமிழகத்தில் புதிதாக 2,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 33 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 116 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,142-லிருந்து 2,116 ஆக குறைந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 528 பேர், செங்கல்பட்டில் 285 பேர், கோவையில் 167 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. மேலும் இன்றைய நிலவரப்படி 16 ஆயிரத்து 702 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 ஆயிரத்து 243 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து இன்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 69 ஆயிரத்து 526 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.