< Back
மாநில செய்திகள்
திருச்சியில் உலக சாதனைக்காக 2,108 மாணவர்கள் பங்கேற்கும் செஸ் போட்டி; இன்று நடக்கிறது
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சியில் உலக சாதனைக்காக 2,108 மாணவர்கள் பங்கேற்கும் செஸ் போட்டி; இன்று நடக்கிறது

தினத்தந்தி
|
15 July 2022 8:38 PM GMT

திருச்சியில் உலக சாதனைக்காக 2,108 மாணவர்கள் பங்கேற்கும் செஸ் போட்டி இன்று நடக்கிறது.

மாணவ-மாணவிகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், திருச்சியில் உள்ள கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், உலக சாதனை நிகழ்த்தும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2,108 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மாபெரும் சதுரங்க விளையாட்டுப் போட்டி இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டு பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது கலெக்டர் பிரதீப்குமார், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரதீப்குமார், பள்ளி முதல்வர் ஜேம்ஸ்பால்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உலக சாதனை

இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பிரபல பாரா ஒலிம்பிக் செஸ் வீராங்கனை ஜெனித்தா ஆண்டோ வாயிலாக, செஸ் விளையாட்டிற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் செஸ் 'செட்' வழங்கப்பட்டு செஸ் போட்டி நடத்தப்படுகிறது. உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் இந்த நிகழ்ச்சியை ஆய்வு மேற்கொள்வதன் அடிப்படையில் உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

இதைத்தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ்களையும், பதக்கங்களையும் அமைச்சர்கள் வழங்கி விழாவில் சிறப்புரையாற்றுகின்றனர்.

மேலும் செய்திகள்