< Back
மாநில செய்திகள்
குரூப்-1 தேர்வை 2,104 பேர் பேர் எழுதினர்.
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

குரூப்-1 தேர்வை 2,104 பேர் பேர் எழுதினர்.

தினத்தந்தி
|
19 Nov 2022 11:56 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2,104 பேர் பேர் எழுதினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 2,104 பேர் பேர் எழுதினர்.

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான போட்டித் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிரேஷ் மெட்ரிக் பள்ளி, கங்காதரா மெட்ரிக்பள்ளி, எல்.எப்.சி.மெட்ரிக் பள்ளி, வி.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிஞர் அண்ணா அரசு மகளிர்‌ கலைக் கல்லூரி, ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 12 தேர்வு மையங்களில் 3,343 நபர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நேற்று 2,104 பேர் தேர்வு எழுதினர். மேலும் 1,239 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த நிலையில் தேர்வு நடைபெறுவதை மையங்களுக்கு நேரில் சென்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், தாசில்தார் நடராஜன், தேர்வு மைய அலுவலர்கள் மற்றும் பலர் சென்றிருந்தனர்.

மேலும் செய்திகள்