< Back
மாநில செய்திகள்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மாநில செய்திகள்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தினத்தந்தி
|
25 Aug 2022 1:18 PM IST

வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

பொன்னேரி,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள இரு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 1-வது நிலையில் உள்ள 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.


மேலும் செய்திகள்